'டாக்டர்கள், நர்ஸ் பணியிடங்களை இரு மடங்கு உயர்த்த வேண்டும்'
சென்னை: ' தமிழக சட்டசபை கூட்டத் தொடரில், அரசு மருத்துவர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட வேண்டும்' என, அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை:
மற்ற மாநிலங்களில் மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற ஊதியம் வழங்கப்படும்போது, சுகாதாரத் துறையை மேம்படுத்துவது எப்படி என, அங்கு கனவு காண்கின்றனர்.
ஆனால், சுகாதாரத் துறையில் முன்மாதிரியாக விளங்கும் தமிழகத்தில், மருத்துவர்கள் தங்கள் ஊதியத்துக்காக போராட வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளை நாடும் நோயாளிகளின் எண்ணிக்கை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் பணியிடங்களை, குறைந்தது இரண்டு மடங்காக அதிகரித்தால் தான், மக்களுக்கு மருத்துவ சேவை எளிதாக கிடைக்கும்.
எனவே, வரும் 20ம் தேதி துவங்கும் சட்டசபை கூட்டத் தொடரில், அரசு மருத்துவர்களின் நீண்டகால கோரிக்கையான ஊதிய கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
மரம் வளர்பிற்கு பாராட்டு விழா
-
மது பதுக்கிய மூவர் கைது
-
பயன்பாடின்றி வீணாகும் சுகாதார வளாக கட்டடம்
-
விடுமுறையில் ஊட்டியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
-
தண்ணீருக்கு பதில் மலர் தோட்டமாக மாறிய புளியங்குளம் கண்மாய்
-
புதிய கலெக்டர் அலுவலகம் எதிரில் மேம்பாலம்... அமைக்கப்படுமா? நான்கு வழி சாலையை கடப்பதில் அபாயம்