அரசு ஊழியர்களுக்கு அல்வா கொடுக்கும் ஆட்சி

தகவல் தொழில்நுட்பம் வளர்ந்துள்ள இந்த காலத்தில் முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா காலங்களில் இல்லாத அளவிற்கு, ஒரு ஆசிரியர் போல் பயிற்சி பட்டறை நடத்தி எங்களை தேர்தல் பணிக்கு, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி தயார் செய்துள்ளார்.

கட்சியில் பன்னீர்செல்வம் இணைப்பு குறித்தும், கூட்டணியில் விஜய் கட்சி சேர்வது குறித்தும் பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். தே.ஜ., கூட்டணியில் தினகரன் இருப்பதால், அவர் படத்தை பிரதமர் பொதுக்கூட்ட பிளக்ஸ் போர்டில் போட்டுள்ளனர்.

'உங்கள் கனவு என்ன?' என ஸ்டாலின் கேட்கிறார். தி.மு.க., ஆட்சி ஒழிய வேண்டும் என்பதே ஒட்டுமொத்த மக்களின் கனவு. அரசு ஊழியர்களுக்கு திருநெல்வேலி அல்வாவும், ஸ்ரீவில்லிபுத்துார் பால்கோவாவும், கொடுக்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி; ஆசிரியர்களை சிறையில் அடைக்கும் கொடுங்கோல் ஆட்சி.

-- செல்லுார் ராஜு

முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,

Advertisement