குறை தீர்க்க ஆர்.பி.ஐ., புதிய திட்டம்

வாடிக்கையாளர்களின் புகார்களுக்கு விரைந்து தீர்வு காண, மறுசீரமைக்கப்பட்ட, 'ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டம் 2026' என்ற மேம்படுத்தப்பட்ட புதிய திட்டத்தை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது, வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது.

இதன் கீழ் விசாரணைகள், சுருக்கமான முறையில் நடைபெறும். புகார் பெறுவது மற்றும் செயலாக்கத்துக்கென மையத்தை ரிசர்வ் வங்கி பல இடங்களில் அமைக்கும். இந்த மையத்தில் வாடிக்கையாளர்கள் புகார் செய்யலாம்; அல்லது புகார்களை ஆன்லைனிலும் தாக்கல் செய்யலாம்.

வாடிக்கையாளரின் தொடர்ச்சியான இழப்புகளுக்காக அதிகபட்சம் 30 லட்சம் ரூபாய் வரையும், நேர இழப்பு, செலவுகள், மன வேதனைக்காக 3 லட்சம் ரூபாய் வரையும் இழப்பீடு வழங்க உத்தரவிடுவதற்கு குறைதீர்ப்பு அதிகாரிகளுக்கு அதிகாரம் கிடைக்கும்.

Advertisement