கோயிலில் பொங்கல் விழா 

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே வழுதுார் அருளொளி விநாயகர் கோயில்பொங்கல் விழாவில் விளையாட்டுப் போட்டிகள் நடந்தது.அருளொளி விநாயகருக்கு பல்வேறு அபிஷேகம், அலங்காரத்தில் தீபாராதனை நடந்தது.

இளைஞர்கள், சிறுவர்களுக்கான ஓட்டப் போட்டிகள், பாட்டிலில் தண்ணீர் நிரப்புதல், மியூசிக் சேர் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டது.வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.அன்னதானம் நடந்தது. பக்தர்கள் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அருளொளி மன்றத்தினர் செய்தனர்.

* முதுகுளத்துார் அருகே விளங்குளத்துார் கிராமத்தில் பசும்குடில் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் காப்பகத்தில் பொங்கல் விழா நடந்தது. அவார்டு டிரஸ்ட் செயலாளர் சின்னமருது தலைமை வகித்தார். வளாகத்தில் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

மாணவிகளுக்கு வயதின் அடிப்படையில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.அனைவருக்கும் புத்தாடைகள் வழங்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.

Advertisement