மாஜி ராணுவ வீரரிடம் பயிற்சி பெற்ற 47 பேர் போலீஸ் உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி
புதுச்சேரி: முன்னாள் ரானுவ வீரரின் இலவச பயிற்சி பள்ளியில், பயிற்சி பெற்ற 47 பேர் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 43. இவர் கடந்த 2003ம் ஆண்டு ராணுவத்தில் சேர்ந்து 17 ஆண்டுகள் பணியாற்றினார். இதற்கிடையே கடந்த 2011ம் ஆண்டு திருமணத்திற்கு பின், புதுச்சேரிக்கு குடி பெயர்ந்தார்.
கடந்த 2020ம் ஆண்டு ஓய்வு பெற்ற இவர், இளைஞர்களை நல்வழிப்படுத்தும் நோக்கில், கடந்த 2022ம் ஆண்டு முதல் இலவச உடற் பயிற்சி பள்ளியை துவங்கி, ராணுவம், விமானப்படை, கப்பல் படை, போலீஸ், சிறைத்துறை மற்றும் தீயணைப்பு துறை பணிகளுக்கு செல்ல விருப்பம் உள்ள ஏழை இளைஞர்களுக்கு உடற்பயிற்சி அளித்து வருகிறார்.
அவரிடம், 2022ம் ஆண்டு பயிற்சி பெற்ற 13 பேரில், 8 பேர் போலீஸ் பணிக்கான உடல் தகுதி மற்றும் உடல் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். அவர்களில் 2 பேர் எழுத்து தேர்விலும் தேர்ச்சி பெற்று, போலீஸ் பணியில் சேர்ந்துள்ளனர்.
இதேபோல், 2023ம் ஆண்டு பயிற்சி பெற்ற 130 பேரில் 97 பேர் உடற் தகுதி தேர்வில் வெற்றி பெற்றனர். இதில், ஒரு ஆண் உட்பட 10 பேர் மட்டுமே எழுத்து தேர்வில் வெற்றி பெற்று போலீசாக பணியாற்றி வருகின்றனர்.
தொடர்ந்து தற்போது நடந்த போலீஸ் பணிக்கு விண்ணப்பித்த பெற்றோரை இழந்த மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள 60 பேருக்கு பயிற்சி அளித்தார்.
அவர்களில், 35 பெண்கள் உட்பட 47 பேர் உடல் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள், அடுத்த மாதம் நடக்கவுள்ள எழுத்து தேர்வுக்கு தேர்வாகினர்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்