மாட்டு பொங்கல் காய்கறி அலங்காரத்தில் நந்தி

உடுமலை: மாட்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, உடுமலை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், நந்தி பெருமானுக்கு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தது.

உடுமலை தில்லை நகர், ரத்தினாம்பிகை உடனுறை ரத்தினலிங்கேஸ்வரர் கோவிலில், நேற்று பிரதோஷம் மற்றும் மாட்டுப்பொங்கல் விழாவை முன்னிட்டு, சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடந்தன.

மேலும், நந்தி பெருமானுக்கு பல்வேறு திரவியங்களால் அபிேஷகம் செய்யப்பட்டு, காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் மேற்கொண்டனர்.

Advertisement