அ.தி.மு.க., சைதை பகுதி செயலர் தற்கொலை
ஜாபர்கான்பேட்டை:அ.தி.மு.க., சைதாப்பேட்டை பகுதி செயலர் தற்கொலை செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜாபர்கான்பேட்டை, பள்ளிக்கூட ஆறாவது சாலையை சேர்ந்தவர் சைதை சுகுமார், 47; வழக்கறிஞர். இவர், அ.தி.மு.க., சைதாப்பேட்டை மேற்கு பகுதி செயலர். இவரு க்கு திருமணமாகி, இரு பிள்ளைகள் உள்ளனர்.
கட்சி நிர்வாகிகளுடன், எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்துக் கொண்டிருந்தார்.
நேற்று முன்தினம் இரவு ஜாபர்கான்பேட்டை, பிள்ளையார் கோவில் தெருவில் பேனர்களை வைத்துவிட்டு நி ர்வாகிகள் வீட்டிற்கு சென்ற நிலையில், மீண்டும் தன் கட்சி அலுவலகத்திற்கு அதிகா லை 3:00 மணி அளவில் சுகுமார் வந்துள்ளார்.
அலுவலகத்தில் இருந்த மின்விசிறியில் சால்வையால் துாக்கிட்டு, இறந்து கிடந்தார்.
பணிகள் முடிந்து, கட்சி அலுவலகத்திற்கு வந்த தொண்டர்களுக்கு சுகுமார் தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. குமரன் நகர் போலீசார், உடலை பி ரேத பரிசோதனைக்காக கே.கே.நகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், கடன் பிரச்னையால் நெருக்கடி இருந்தது தெரிய வந்துள்ளது. கடன் பிரச்னையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரிக்கின்றனர்.
சட்டசபை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளிவர உள் ள நிலையில், சுகுமார் தற்கொலை செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.