வீரட்டானேஸ்வரர் கோவில் நந்திகேஸ்வரருக்கு சிறப்பு வழிபாடு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் வீரட்டானேஸ்வரர் கோவிலில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நந்திகேஸ்வரர்க்கு சிறப்பு வழிபாடு நடந்தது.

திருக்கோவிலுார் கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவிலில், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், நந்திகேஸ்வர பெருமானுக்கு மகா அபிஷேகம், காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவமூர்த்தி சிவானந்தவள்ளி சமேத சந்திரசேகரர், நந்திகேஸ்வரர் முன்பாக சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க நந்திகேஸ்வரருக்கு ஷோடசோபவுச்சார தீபாரதனை நடந்தது. இந்து சமய அறநிலையத்துறை மேற்பார்வையில், கொளப்பாக்கம் அரசு நிதி உதவி பெறும் நடுநிலை பள்ளி நிர்வாகி சுப்பிரமணியன் உள்ளிட்ட பக்தர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement