கள்ளக்குறிச்சி விவசாயிகள் 'நாசிக்' கிற்கு பயணம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கூட்டுறவுத்துறை சார்பில், விவசாயிகள் திறன் மேம்பாட்டு சுற்றுலாவிற்காக, நாசிக்கில் உள்ள பால் உற்பத்தி நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த விவசாயிகள் திறன் மேம்பாட்டு சுற்றுலாவிற்காக வடமாநிலத்திற்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன், பதிவாளர் நந்தகுமார் ஆகியோர் சுற்றுலாவுக்கு செல்லும் விவசாயிகளை தேர்வு செய்தனர்.
மாநில கூட்டுறவு ஒன்றிய கூடுதல் பதிவாளர் ரவிச்சந்திரன் தலைமையில், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை மற்றும் சென்னை பகுதியை சேர்ந்த 33 விவசாயிகள் நாசிக் பகுதியில் உள்ள வெங்கடேஸ்வரா கூட்டுறவு மேலாண்மை பால் உற்பத்தி நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு, வைகுந்த மேத்தா தேசிய மேலாண்மை நிலைய பதிவாளர் தர்மராஜ், விரிவுரையாளர் தனஞ்செய் கெயிக்வாட், மாணவர் சேரன், திராட்சை ஆராய்ச்சி நிலைய விரிவுரையாளர் கிஷோர், வெங்கடே ஸ்வரா நிறுவன மேலாண்மை இயக்குநர் அனில்ஷிண்டே ஆகியோர் மண் புழு உரம் மற்றும் பசு மாடு பண்ணை, பால் உற்பத்தி, பயிர் நடவு முறை, பராமரிப்பு, பாசன முறை மற்றும் அறுவடை குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர்.
மேலும்
-
குடியரசு தின அணிவகுப்பு: உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து நாடு முழுவதும் உஷார்!
-
யாருடன் கூட்டணி; டில்லியில் காங்., நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை
-
அன்னுார் வட்டாரத்தில் பொங்கல் கோலாகல கொண்டாட்டம்
-
உங்களுக்கு செட் ஆகல சார்.. வெயிட் பண்ணுங்க: இலவசங்கள் அறிவித்த இபிஎஸ்சுக்கு டிஆர்பி ராஜா பதில்
-
ஈரானில் தொடரும் வன்முறை; விமானத்தில் டில்லி திரும்பிய இந்தியர்கள்!
-
பொலிவுறு நகரம் இந்தூரில் சுத்தமான குடிநீர் இல்லை; ராகுல் விமர்சனம்