லாரி மோதிய விபத்தில் முதியவர் பலி; சாலையில் சிதறிய 1 டன் அன்னாசி பழங்கள்
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே முதியவர் மீது லாரி மோதி கவிழ்ந்து விபத்தில் அன்னாசி பழங்கள் சாலையில் சிதறின.
கேரள மாநிலம் இடுக்கி பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் மகன் ஆனந்த், 25; டிரைவர். இவர், லாரியில் அன்னாச்சி பழம் லோடு ஏற்றி கொண்டு கேரளாவில் இருந்து சென்னைக்கு ஒட்டிச் சென்றார்.
நேற்று காலை 7.45 மணி அளவில் உளுந்துார்பேட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது, சாலை ஓரமாக நடந்து சென்ற எலவனாசூர்கோட்டை அடுத்த பரமேஸ்வரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த நாராயணசாமி, 66; மீது லாரி மோதி சாலையில் கவிழுந்து விபத்துக்குள்ளானது.
இதில் படுகாயமடைந்த நாராயணசாமியை உடன் அருகில் இருந்தவர்கள் மீட்டு உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நாராயணசாமி பரிதாபமாக இறந்தார்.
விபத்தில் லாரியில் இருந்த ஒரு டன் அன்னாசி பழங்கள் சாலையில் சிதறியது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி அனுப்பினர்.
இது குறித்து எலவனாசூர்கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்