108 சேலை அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்

உடுமலை: பொங்கல் திருநாள் திருவிழாவை முன்னிட்டு, கோவில்களில் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம், புதிய வஸ்திரம் அணிவித்து, சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தன.

உடுமலை தலைகொண்டம்மன் கோவிலில், பொங்கல் திருநாளை முன்னிட்டு, கோவிலில் பொங்கல் வைத்து, அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம் என பல்வேறு திரவியங்களில் அபிேஷகம் நடந்தது. தொடர்ந்து, 108 சேலைகளால், அலங்காரம் செய்யப்பட்டது. வண்ண சேலைகள் அலங்காரத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Advertisement