தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் 28ல் முதலாம் ஆண்டு விழா

ஆனைமலை: ஆனைமலை தர்மராஜா திரவுபதி அம்மன் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிேஷக விழா நடைபெற்றது. இதை தொடர்ந்து, ஓர் ஆண்டு நிறைவடைந்ததையடுத்து, ஸம்வத்ஸராபி ேஷம் என அழைக்கப்படும், முதலாம் ஆண்டு விழா வரும், 27ம் தேதி மாலை, 5:30 மணிக்கு அனுக்ஞை பூஜையுடன் துவங்கியது.

தொடர்ந்து, விக்னேஸ்வரபூஜை, புண்யாகவாசனம், வேதிகார்ச்சனை, முதலாம் கால யாக பூஜை நடக்கிறது.இரவு, 8:30 மணிக்கு த்ரவியாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சி நடக்கிறது.

வரும், 28ம் தேதி காலை, 7:00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், வேதிகார்ச்சனை, இரண்டாம் கால யாக பூஜை, திரவியாஹூதி, வஸ்தராஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கிறது.

காலை, 9:00 மணிக்கு கலசங்கள் புறப்பாடு, மஹா அபிேஷகம் நடக்கிறது. காலை, 9:30 மணிக்கு தர்மராஜா திரவுபதி அம்மனுக்கு கலசாபிேஷகம், தீபாராதனை நடக்கிறது.

காலை, 10:00 மணிக்கு அன்னதானம் வழங்குதல், மாலை, 6:00 மணிக்கு தர்மராஜா திரவுபதி அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கின்றன.விழாவுக்கான ஏற்பாடுகளை அறங்காவலர் செந்தில்வேல், ஆய்வாளர் சித்தரா மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement