பழநி நோக்கி நகரத்தார் காவடி ஜன. 25 ல் புறப்பாடு
தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து சுமார் 500 ஆண்டுகளுக்கு மேல் தைப்பூசம் திருநாளுக்கு பழநிக்கு காவடிகள், மற்றும் மக்கள் பாதயாத்திரையாக சென்று வழிபட்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக இந்த ஆண்டு பிப்., முதல் தேதி தைப்பூச விழாவை முன்னிட்டு காவடிகள் ஜன., 25 ம் தேதி தேவகோட்டையில் இருந்து புறப்படுகிறது. ஜன., 23ல் வெள்ளிக்கிழமை நகர பள்ளிக்கூடத்தில் காவடிகள் கட்டப்பட்டு பொங்கல் வைத்து பூஜைகள் நடைபெறும். ஜன., 24 ல் காவடிகள் நகர்வலம் வந்து சிலம்பணி சிதம்பர விநாயகர் கோயிலை வந்தடையும்.
அங்கு காவடிகளுக்கு பூஜை செய்து வழிபடுவர். ஜன., 25 அன்று அதிகாலை பூஜைக்கு பின் விநாயகர் கோயிலில் இருந்து தேவகோட்டை, மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்களுடன் பழநிக்கு காவடி புறப்படுகிறது. துாய மரியன்னை கோயில் அருகில் நகர மக்களின் பிரியா விடை கொடுக்க காவடிகள் புறப்பட்டு குன்றக்குடி சென்று தங்குகின்றனர்.
மேலும்
-
சரியான நேரத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்படுவேன்; வெனிசுலாவின் எதிர்க்கட்சித் தலைவர் மச்சாடோ நம்பிக்கை
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்