பாக்கம் அரசு பள்ளி மாணவர்கள் சிலம்பம் போட்டியில் சாதனை

கண்டமங்கலம்: கண்டமங்கலம், பாக்கம் அரசு உயர்நிலை பள்ளி மாணவர்கள், சென்னையில் நடந்த மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் இரண்டு மற்றும் மூன்றாம் பரிசு பெற்று சாதனை படைத்துள்ளனர்.

சென்னை மதுரவாயலில் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில் பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். பல்வேறு பிரிவுகளில் நடந்த இப்போட்டியில் பத்தாம் வகுப்பு மாணவர் பரத், மாணவி மதிவதனி ஆகியோர் மாநில அளவில் இரண்டாம் பரிசும், மாணவர் சரண்ராஜ், மாணவி ஹரிணி மூன்றாம் பரிசும் பெற்றனர்.

அதேபோல் ஒன்பதாம் வகுப்பு மாணவி தர்ஷினி, 8ம் வகுப்பு மாணவி பவித்ரா, 7ம் வகுப்பு மாணவி சுதர்சனா, 6ம் வகுப்பு மாணவர் சாய் கிருஷ்ணா ஆகியோர் மூன்றாம் பரிசும் பெற்றனர்.

இவர்களுக்கு பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில், கண்டமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க., செயலாளர் ராமதாஸ், பயிற்சியாளர் பிரசாந்த் மற்றும் சாதனை படைத்த மாணவ, மாணவிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

Advertisement