சின்னசாமி மைதானத்துக்கு அனுமதி
பெங்களூரு: சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்திட நிபந்தைகளுடன் அனுமதி கிடைத்திருப்பதால் பெங்களூரு ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
கடந்த ஆண்டு நடந்த பிரிமியர் கிரிக்கெட் தொடரில் பெங்களூரு அணி முதன்முறையாக கோப்பை வென்றது. இதன் வெற்றிக் கொண்டாட்டம், பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடந்தது. அப்போது, கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் பலியாகினர். இதனால் இங்கு போட்டிகளை நடத்த தடை விதிக்கப்பட்டது. தவிர, இந்த ஆண்டுக்கான பிரிமியர் போட்டிகள் இங்கு நடப்பதில் சிக்கல் எழுந்தது.
இந்நிலையில், முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வெங்கடேஷ் பிரசாத் தலைமையிலான பெங்களூரு கிரிக்கெட் சங்கம் (கே.எஸ்.சி.ஏ.,) சார்பில் சின்னசாமி மைதானத்தில் மீண்டும் போட்டிகளை நடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
சமீபத்தில் பிரிமியர் தொடருக்கான பெங்களூரு அணி நிர்வாகம் சார்பில் சின்னசாமி மைதானத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் 300 முதல் 350 கண்காணிப்பு கேமராக்களை நிறுவ வலியுறுத்தப்பட்டது. இதற்கான செலவை (ரூ. 4.50 கோடி) பெங்களூரு அணி நிர்வாகம் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்தது.
சமீபத்தில், மாநில அரசால் நியமிக்கப்பட்ட குழு ஒன்று, மைதானத்தின் பாதுகாப்பு மேம்பாட்டு பணிகள் குறித்து ஆய்வு செய்தது. பாதுகாப்பு வசதிகள் திருப்தி அளிப்பதாக அந்த குழு, மாநில அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனையடுத்து சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்திட, மாநில அரசு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கியது.
இதுகுறித்து கே.எஸ்.சி.ஏ., செய்தித்தொடர்பளார் வினய் கூறுகையில், ''சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்திட மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது என்பதை தெரிவிப்பதில் மகிழ்ச்சி,'' என்றார்.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்