உ.பி.,யிடம் வீழ்ந்தது மும்பை: லானிங், லிட்ச்பீல்ட் அரைசதம்
நவி மும்பை: கேப்டன் லானிங், லிட்ச்பீல்ட் அரைசதம் கடந்து கைகொடுக்க, உ.பி., அணி 22 ரன் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது.
நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடந்த பெண்கள் பிரிமியர் லீக் தொடருக்கான லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' மும்பை, உ.பி., அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
உ.பி., அணிக்கு கிரண் நவ்கிரே (0) ஏமாற்றினார். பின் இணைந்த கேப்டன் மெக் லானிங், லிட்ச்பீல்ட் ஜோடி நம்பிக்கை தந்தது. இருவரும் அரைசதம் விளாசினர். இரண்டாவது விக்கெட்டுக்கு 124 ரன் சேர்த்த போது லிட்ச்பீல்ட் (61) அவுட்டானார். அபாரமாக ஆடிய லானிங், 70 ரன்னில் ஆட்டமிழந்தார். ஹர்லீன் தியோல் (25), டிரையன் (21) ஓரளவு கைகொடுத்தனர். ஷ்வேதா ஷெராவத் (0), சோபி எக்லெஸ்டோன் (1), தீப்தி சர்மா (0) சோபிக்கவில்லை. உ.பி., அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 187 ரன் எடுத்தது. மும்பை சார்பில் அமெலியா கெர் 3, நாட் சிவர்-புருன்ட் 2 விக்கெட் கைப்பற்றினர்.
சவாலான இலக்கை விரட்டிய மும்பை அணிக்கு சஜீவன் சஜனா (10), ஹேலி மாத்யூஸ் (13) சுமாரான துவக்கம் கொடுத்தனர். நாட் சிவர்-புருன்ட் (15), கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் (18), நிகோலா கேரி (6) நிலைக்கவில்லை. மும்பை அணி 69/5 ரன் எடுத்து தடுமாறியது.
பின் இணைந்த அமெலியா கெர், அமன்ஜோத் கவுர் ஜோடி ஆறுதல் தந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 83 ரன் சேர்த்த போது அமன்ஜோத் (41) அவுட்டானார்.
மும்பை அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 165 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. அமெலியா (49), கமலினி (9) அவுட்டாகாமல் இருந்தனர். உ.பி., அணி சார்பில் ஷிகா பாண்டே 2 விக்கெட் சாய்த்தார். உ.பி., அணி தொடர்ந்து 2வது வெற்றி பெற்றது. ஆட்ட நாயகி விருதை மெக் லானிங் (உ.பி.,) வென்றார்.
பெங்களூரு வெற்றி
மற்றொரு லீக் போட்டியில் டில்லி, பெங்களூரு அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. ஷைபாலி வர்மா (62), லுாசி (36) ஆறுதல் தர, டில்லி அணி 20 ஓவரில் 166 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. சுலப இலக்கை விரட்டிய பெங்களூரு அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா (96 ரன், 61 பந்து, 3x6, 13x4), ஜார்ஜியா (54*) அரைசதம் கடந்து கைகொடுத்தனர். பெங்களூரு அணி 18.2 ஓவரில் 169/2 ரன் எடுத்து, 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெங்களூரு அணி தொடர்ச்சியாக 4வது வெற்றியை பதிவு செய்தது.
மேலும்
-
வங்கதேசத்தை குழப்பத்தில் தள்ளும் முகமது யூனுஸ்; ஷேக் ஹசீனா குற்றச்சாட்டு
-
நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்
-
காசி தமிழ்ச்சங்கமத்தில் கலந்து கொண்ட தமிழக இளைஞருக்கு பிரதமர் மோடி பாராட்டு
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்