'கொடை'யில் குவிந்த பயணிகள்; போக்குவரத்து நெரிசலால் அவதி

கொடைக்கானல்: பொங்கல் விடுமுறையில் கொடைக்கானலில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

பிரையன்ட் பூங்கா, கோக்கர்ஸ் வாக், வெள்ளி நீர்வீழ்ச்சி, மன்னவனுார் சூழல் சுற்றுலா மையம், வன சுற்றுலா தலங்களை ரசித்தனர். ஏரிச்சாலையில் குதிரை, சைக்கிள், ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.

வெள்ளி நீர்வீழ்ச்சி முதல் அப்சர்வேட்டரி இடையே வாகனங்கள் அணிவகுத்து நின்றததால் போக்குவரத்து நெரிசலால் பயணிகள் அவதியடைந்தனர்.

போதுமான போலீசார் இருந்த போதும் நெரிசல் தவிர்க்க முடியாத சூழலால் பயணிகள் செய்வது அறியாது தவித்தனர்.

பகலில் சுட்டெரிக்கும் வெயிலும் மதியம் 3:00 மணிக்கு பின் பனியின் தாக்கமும் குளிரும் நீடித்தது.

Advertisement