சுவர்களில் ஏற்படும் சிறிய விரிசல்கள் குழிகளை சரி செய்வது எப்படி?
வீடு கட்டுவதில் அனைத்து பணிகளையும் பார்த்து பார்த்து மேற்கொண்டாலும், அதில் ஒருசில இடங்களில் நமக்கு தெரியாமல் சில பாதிப்புகள் வந்துவிடுகின்றன. குறிப்பாக, தரமான முறையில் துாண்கள், பீம்கள், மேல் தளம் அமைத்து, சுவர்கள் கட்டும் வேலை நடந்திருக்கும்.
இதில், வாயில் பகுதியில் தலை வாசல் சட்டம் அமைப்பது, ஜன்னல் சட்டம் அமைப்பது, மின்சார சுவிட்ச் பாக்ஸ் அமைப்பது ஆகிய இடங்களில் பணிகள் துல்லியமாக முடிக்க வேண்டும். இதில், இணைப்பு பணிகள் தரமான நடக்க வேண்டும் என்று தான் அனைவரும் விரும்புகின்றனர்.
ஆனால், இந்த பணிகளில் ஆரம்ப நிலையில் இருக்கும் கவனம், பினிஷிங் நிலையில் பெரும்பாலும் குறைந்து விடுகிறது என்பதை பலரும் கவனிப்பது இல்லை. கட்டுமான பணிகள் முடிந்து பயன்படுத்தும் நிலையில் தான் வாசல், ஜன்னல் சட்டங்கள் சுவருடன் இணையும் இடத்தில் விரிசல்கள் போன்ற இடைவெளி காணப்படுவது தெரியவரும்.
இது போன்ற மெல்லிய இடைவெளிகள் இருந்தால் என்ன? அதனால், கட்டடத்துக்கு என்ன பாதிப்பு வந்துவிடப்போகிறது என்று மக்கள் நினைக்கின்றனர். மேலோட்டமாக பார்த்தால் இது மிக சிறிய விஷயமாக தெரிந்தாலும், இதன் தாக்கம் கட்டடத்துக்கு பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.
குறிப்பாக இது போன்ற இடைவெளிகளில் பூச்சிகள் அடைவதுடன், அதில் ஈரம் இறங்குவதால், கட்டடத்தில் விரிசல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே, கட்டடத்தில் பணிகள் முடியும் நிலையில் இது போன்ற பாகங்களை துல்லியமாக கண்காணித்தால் இடைவெளிகள் இருப்பது தெரியவரும்.
உங்கள் வீட்டு சுவர்களில் இது போன்ற தேவையில்லாத இடைவெளிகள் இருந்தால், அதை மூடுவதற்கு என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குறிப்பாக, 'வால் கிராக் ரிப்பேர் பேஸ்ட்' என்ற வகையில் பல்வேறு நிறுவனங்களின் தயாரிப்புகள் தற்போது கிடைக்கின்றன.
பற்பசை போன்ற இவற்றை வாங்கி, இடைவெளி இருக்கும் இடங்களில் பூசினால் போதும். குறிப்பாக, சுவர்களில் வண்ணம் அடிக்கும் பணிக்கு முன்னதாக இதை செய்தால், இறுதி கட்டத்தில் சுவர்களில் துல்லியமான வகையில் பினிஷிங்கிடைக்கும்.
கதவு, ஜன்னல் மட்டுமல்லாது சுவிட்ச் போர்டு ஓரங்களில் தேவையில்லாத இடைவெளியை தவிர்ப்பதில் இது போன்ற பொருட்களை வாங்கி நீங்களே பயன்படுத்தி வேலையை முடிக்கலாம். பயன்பாட்டு நிலையில் கட்டடத்தில் இது போன்ற இடைவெளி ஏற்படும் போதும் வால் கிராக் ரிப்பேர் பேஸ்ட்களை பயன்படுத்தலாம்.
இதற்காக நீங்கள் வாங்கும் பேஸ்ட் எந்த நிறுவனத்தில், எப்படி தயாரிக்கப்பட்டது என்பது போன்ற விஷயங்களை சரி பார்த்து கொள்வது நல்லது என்கின்றனர் கட்டுமான துறை வல்லுனர்கள்.
வீட்டு சுவர்களில் தேவையில்லாத இடைவெளிகள் இருந்தால், அதை மூடுவதற்கு என பல்வேறு பொருட்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. எது தரமானது, நமக்கு ஏற்றது என்பதை பார்த்து வாங்கி பயன்படுத்தலாம்.
மேலும்
-
எம்ஜிஆர் பிறந்தநாள் சிறப்புப்பதிவு; எம்ஜிஆர் தழுவிய சட்டை தொண்டர் வீட்டில் அலங்கரிப்பு
-
நவீன ஜல்லிக்கட்டு போட்டி
-
விசைத்தறியை நவீன மயமாக்கும் சப்ளையர் திட்டத்தில் சேர விண்ணப்பிக்க அழைப்பு
-
இலக்கிய பேரவை திருவள்ளுவர் தினம் கொண்டாட்டம்
-
மாட்டுப்பொங்கல் கோலாகலம்
-
தை மாத பிரதோஷத்தையொட்டி ஏகாம்பர ஈஸ்வரருக்கு சிறப்பு பூஜை