போதையில் அராஜகம்: மூன்று பேர் சிக்கினர்

திருவள்ளூர்: மது போதையில் ஆபாசமாக பேசி, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய மூவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் பேருந்து நிலையத்தில், நேற்று முன்தினம் மாலை நகர காவல் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது, மது போதையில் இருவர், ஆபாசமாக பேசி பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தினர்.

இருவரையும் பிடித்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவள்ளூர் வேம்புலியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கண்ணன், 38 மற்றும் அரக்கோணம் வேடல் பகுதியைச் சேர்ந்த சாய்தின்யா, 28, என தெரியவந்தது. வழக்கு பதிந்த திருவள்ளூர் நகர போலீசார், இருவரையும் கைது செய்தனர்.

அதேபோல், நேற்று காலை திருவள்ளூர் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை அருகே மது போதையில், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய, திருநின்றவூரைச் சேர்ந்த சத்யா, 23, என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Advertisement