ராசிபுரம் பகுதியில் இருந்து 1,000 பேர் பாதயாத்திரை



ராசிபுரம்: ராசிபுரம் மற்றும் நாமகிரிப்பேட்டை, காக்கா-வேரி, மங்களபுரம், பட்டணம் உள்ளிட்ட சுற்று-வட்டார பகுதிகளில், ஜன., 1ல் முருக பக்தர்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினர். தை, 1 நள்ளிரவு முதல் பழனி முருகன் கோவிலுக்கு நடை பயணமாக செல்வது வழக்கமாக உள்ளது. தற்போது ராசிபுரத்தில் இருந்து, 1,000-க்கும் மேற்-பட்ட பக்தர்கள் மாலை அணிந்து, பச்சை வேட்டி-யுடன் பழனி முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை புறப்பட்டு சென்றனர்.


பக்தர்கள் ஆட்டோக்களில் வண்ண விளக்குகள் பொருத்தி, முருகனை அலங்கரித்து அழைத்துச்சென்றனர். பழனி முருகன் பாதயாத்திரை பக்தர்களுக்கு வழிநெடு-கிலும் டீ, காபி, பாதாம்பால், உணவு, பிஸ்கட் உள்-ளிட்ட பொருட்கள் அன்னதானமாக வழங்கப்பட்-டன.
இதேபோல், சீராப்பள்ளியில் உள்ள பாலமு-ருகன் பாதயத்திரை, நாமகிரிப்பேட்டையில் உள்ள குழுக்களும் பழனிக்கு நடைபயணம் சென்-றனர். சீராப்பள்ளியில் நுாற்றுக்கும் மேற்பட்டோர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடைபயணம் புறப்பட்டனர்.

Advertisement