ப.பாளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்ற பக்தர்கள்


பள்ளிப்பாளையம்: பள்ளிப்பாளையம் காவிரியாற்று பாலம் வழி-யாக ஏராளமான பக்தர்கள், பல்வேறு மாவட்டங்-களில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை சென்-றனர்.


சேலம், நாமக்கல் மற்றும் பல்வேறு மாவட்டங்-களில் இருந்து ஏராளமான பக்தர்கள், பள்ளிப்பா-ளையம் வழியாக பழனிக்கு பாதயாத்திரை சென்று வருகின்றனர். இவர்கள், கடந்த, மூன்று நாட்களாக, பள்ளிப்பாளையம் காவிரி பாலம் வழியாக செல்கின்றனர். நேற்று அதிகாலை, 2:00 மணி முதல் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக சென்-றதால், காவிரி ஆற்றுப்பாலத்தில் பக்தர்கள் கூட்-டமாக காணப்பட்டது.


பள்ளிப்பாளையம் வழியாக செல்லும் பக்தர்கள், மூன்று அல்லது நான்காவது நாளில் பழனி மலைக்கு சென்றடைவர். பாதயாத்-திரை சென்ற பக்தர்களுக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் அன்னதானம், கரும்பு, பிஸ்கட், டீ வழங்-கப்பட்டது.
பழனிக்கு நடைபாதையாக ஏராளமானோர் சென்றதால், பள்ளிப்பாளையம் புதிய பாலத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை, 6:00 மணி முதல், 10:00 மணி வரை, போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் ஊர்ந்தபடியே சென்றன.

Advertisement