பொங்கலையொட்டி 3 நாளில் 1.40 லட்சம் டன் காய்கறி விற்பனை
நாமக்கல்: பொங்கல் பண்டிகையையொட்டி, நாமக்கல் உழவர் சந்தையில், மூன்று நாட்களில், 1.40 லட்சம் டன் காய்கறி, 55.25 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
நாமக்கல், கோட்டை மெயின் ரோட்டில், உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. தினமும், அதி-காலை, 5:00 முதல், 10:00 மணி வரை செயல்படும் உழவர் சந்தையில், நாமக்கல் பகுதியில் உள்ள விவசாயிகள், தங்கள் தோட்டங்களில் விளைந்த காய்கறி, பழங்களை கொண்டுவந்து நேரடியாக விற்பனை செய்கின்றனர். பொதுமக்கள் உழவர் சந்தைக்கு வந்து அவற்றை வாங்கிச் செல்கின்-றனர். வழக் கமாக, வார விடுமுறை நாட்களான, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அதிகமான வாடிக்கையாளர்கள் உழவர் சந்தைக்கு வந்து, தங்களுக்குதேவையான காய்கறி, பழங்களை வாங்கி செல்-வது வழக்கம்.
இந்நிலையில், பொங்கல் பண்டிகை முன்னிட்டு, கடந்த, மூன்று நாட்களில், வழக்கத்தை காட்-டிலும், உழவர் சந்தையில், காய்கறிகள் விறுவி-றுப்பாக வியாபாரம் நடந்தது. மொத்தம், 464 விவ-சாயிகள் காய்கறி, பழங்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். மொத்தம், ஒரு லட்சத்து, 14,425 கிலோ காய்கறிகள் மற்றும் 25,655 கிலோ பழங்கள், 110 கிலோ பூக்கள் என, மொத்தம், ஒரு லட்சத்து, 40,190 கிலோ எடையுள்ள விளை பொருட்கள் உழவர் சந்தைக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்பட்டன. அவற்றை, 23,318 பொதுமக்கள் வாங்கி சென்றனர். அதன் மூலம், 55 லட்சத்து, 25,735 ரூபாய்க்கு விற்பனையானது.
மேலும்
-
மஹாராஷ்டிரா, திருவனந்தபுரத்தின் வெற்றி தமிழகத்திலும் உறுதி; மத்திய அமைச்சர் எல்.முருகன் நம்பிக்கை
-
முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் சேவையை துவக்கி வைத்தார் பிரதமர் மோடி
-
எம்ஜிஆர் 109வது பிறந்த நாள்... இபிஎஸ், ஓபிஎஸ், டிடிவி தினகரன் மலர்தூவி மரியாதை
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்