சவுண்டம்மன் கோவில் திருவிழா வீரகுமாரர்கள் ஜோதி அழைப்பு
குமாரபாளையம்: குமாரபாளையம் சவுண்டம்மன் கோவில் திரு-விழாவில், வீரகுமாரர்கள் கத்திபோட்டவாறு, ஜோதி வடிவில் உள்ள அம்மனை ஊர்வலமாக அழைத்து வந்தனர்.
குமாரபாளையம்-சேலம் சாலையல், ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா, முகூர்த்தக்கால் நடும் வைபவத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடத்தப்பட்டது. கடந்த, 12ல் சுவாமி அழைப்பு, 13ல் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. நேற்று முன்தினம், காவிரி ஆற்றிலி-ருந்து சாமுண்டி அழைப்பு, பெரிய பொங்கல் பூஜை நடந்தது.
நேற்று மாலை, மஹா ஜோதி அழைத்தல் வைபவம் நடந்தது. இதில், அம்மனை ஜோதி வடி-வமாக முக்கிய வீதிகள் வழியாக, வீரகுமாரர்கள் கத்தி போட்டவாறு அழைத்து வந்தனர். இன்று காலை, 7:30 மணிக்கு அம்மன் கோவிலிலிருந்து மஞ்சள் நீராடுதல், மாலை, 6:00 மணிக்கு சத்தாப-ரணம், வாணவேடிக்கை நடக்கிறது.
மேலும்
-
சத்தீஸ்கரில் என்கவுன்டர்; நக்சலைட்டுகள் 2 பேர் சுட்டுக்கொலை
-
ஹைதராபாத்தில் தமிழக பள்ளி இசைக்குழுவினருக்கு அநீதி; தமிழக அரசு மவுனம் கூடாது என்கிறார் அண்ணாமலை
-
மகளிருக்கு மாதம் ரூ.2000; ஆண்களுக்கும் இலவச பஸ்: தேர்தல் வாக்குறுதி அளித்தார் இபிஎஸ்
-
ஜல்லிக்கட்டில் சிறந்த வீரருக்கு அரசு வேலை வழங்கப்படும்; முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
ஈரானில் 800 பேரின் மரண தண்டனை ரத்து; அதிபர் டிரம்ப் பாராட்டு
-
எம்ஜிஆரின் தொலைநோக்கு பார்வையை நனவாக்க பாடுபடுவோம்; பிரதமர் மோடி