நாமக்கல்லில் 2 நாள் பொங்கல் கலை நிகழ்ச்சி

நாமக்கல்: சேலம் மண்டல கலை பண்பாட்டுத்துறை சார்பில், நாமக்கல் பூங்கா சாலையில், இரண்டு நாட்கள் பொங்கல் கலை நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் துவங்கிய நிகழ்ச்சி, நேற்று இரண்டாம் நாளாக நடந்தது.


முதல் நாளில், நாதஸ்வர இசை நிகழ்ச்சி, சாமி-யாட்டம், கிராமிய நாட்டுப்புற ஆட்டம், கரகாட்டம், ஒயிலாட்ட நிகழ்ச்சி நடந்தது.


தொடர்ந்து, நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில் நையாண்டி மேளம், கிராமிய இசை நிகழ்ச்சி, சிலம்பாட்டம், புலியாட்டம், கிராமிய நடனம் ஆகியவை நடந்தன.
ஏராளமான பொதுமக்கள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர். ஏற்பாடுகளை, ஜவகர் சிறுவர் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தில்லை சிவகுமார் செய்திருந்தார்.

Advertisement