எம்.ஜி.ஆர்., பிறந்த நாள் விழா

வானுார்: வானுார் ஒன்றியத்திற்குட்பட்ட இடையஞ்சாவடி அ.தி.முக., கிளை சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., 109வது பிறந்தநாள் விழா நடந்தது.

விழாவில், சிறப்பு விருந்தினர் திருச்சிற்றம்பலம் ஊராட்சி தலைவர் வெங்கடேசன் எம்.ஜி.ஆர்., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் எம்.ஜி.ஆர் மன்ற மாவட்ட துணை தலைவர் சரவணன், துணை செயலாளர் வேளிநாதன், முன்னாள் ஊராட்சி தலைவர் ராஜவேல், வானுார் ஒன்றிய ஜெ., பேரவை துணை தலைவர் ஆறுமுகம்.

துணை செயலாளர் சக்திவடிவேலன், நாட்டாண்மை கிருஷ்ணமூர்த்தி, நிர்வாகிகள் மணி, வேலியப்பன், அன்பு, ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் பூபாலன், ஜெயகோபால், பாசறை துணை செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை ஒன்றிய இளைஞரணி துணை செயலாளர் ராமசாமி, மேலவை பிரதிநிதி முத்துக்குமார், தலைமைக் கழக பேச்சாளர் ஜெகன் செய்திருந்தனர்.

Advertisement