விசாரணைக்கு ஆஜராகாத 4 பேர் சுற்றிவளைப்பு

சேலம்: சேலம், சீலநாயக்கன்பட்டி, சக்தி நகரை சேர்ந்-தவர் முத்து, 39. இவர் மீது, 2020ல், அன்னதானப்-பட்டி போலீசாரால், கொலை மிரட்டல் வழக்கு பதிந்து, நிலுவையில் உள்ளது. நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்ததால், 6 ஆண்டாக தலைம-றைவாக இருந்த அவரை, சீலநாயக்கன்பட்டியில் நேற்று போலீசார்
சுற்றிவளைத்தனர்.


அதேபோல் சேலம், மணியனுார், காத்தா-யம்மாள் நகரை சேர்ந்த தனபால், 39. இவர் மீது, 2023ல் அடிதடி சம்பவத்தில் ஈடுபட்ட வழக்கு, அன்னதானப்பட்டி போலீசில் நிலுவையில் உள்-ளது. அமானி கொண்டலாம்பட்டி, நாட்டாமங்க-லத்தை சேர்ந்தவர் ரித்திக்ராஜ், 23. இவர் மீது கொண்டலாம்பட்டி போலீசார், 2020ல் திருட்டு வழக்கு பதிவு செய்தனர். நாமக்கல், திருச்செங்-கோடு, சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் ஈஸ்வர-மூர்த்தி, 31. இவர் மீது, கொண்டலாம்பட்டி போலீசார், 2018ல் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்திருந்தனர். இவர்களும் வழக்கு விசார-ணைக்கு ஆஜராகாததால், நீதிமன்றம் பிடி-வாரன்ட் பிறப்பித்தது. இதனால் நேற்று, அவரவர் வீடுகளில் இருந்த, 3 பேரையும், அந்தந்த எல்லை ஸ்டேஷன் போலீசார் கைது செய்தனர்.

Advertisement