நாளை திருக்குறள், ஓவியப்போட்டி

சேலம்: சேலம் கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்-பள்ளியில், குறள் வார விழாவின் ஒரு நிகழ்வாக, நாளை காலை, 10:00 மணிக்கு, மக்கள் மட்டும் பங்-கேற்கும் குறள் ஒப்பு
வித்தல் போட்டி நடக்க உள்ளது. தெரிந்த குறளை ஒப்புவிக்கலாம். குறளின் எண்ணிக்கை அடிப்ப-டையில் பரிசு வழங்கப்படும். முதல் பரிசாக, 5 பேருக்கு, 5,000 ரூபாய் வீதமும், 2ம் பரிசாக, 5 பேருக்கு, 3,000 வீதமும், 3ம் பரிசாக, 5 பேருக்கு, 2,000 வீதமும் பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்-கப்படும்.


ஓவிய போட்டியிலும் மக்களுக்கு மட்டும் அனு-மதி. மதியம், 2:00 முதல், 3:00 மணி வரை போட்டி நடக்கும். திருக்குறள் சார்ந்த வகையில் ஓவியப்-போட்டி தலைப்பு இருக்கும். சிறந்த ஓவியம் காட்-சிப்படுத்தப்படும். முதல் மூன்று பரிசுகள் முறையே, 5,000; 3,000; 2,000 ரூபாய் வீதம், பாராட்டு சான்றிதழுடன் வழங்கப்படும். போட்டி-களில் பங்கேற்க விரும்புவோர், ஆதார் அட்டையை கொண்டு
வர வேண்டும் என, கலெக்டர் பிருந்தாதேவி தெரி-வித்துள்ளார்.

Advertisement