சாலையில் திரியும் மாடுகளால் அச்சம்

பாப்பரம்பாக்கம்: நெடுஞ்சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

கடம்பத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட மண்ணுார் பகுதியில் உள்ள தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் மாடுகள் அதிகளவில் சுற்றித் திரிகின்றன. இரவு நேரங்களில் சாலையிலேயே மாடுகள் ஓய்வெடுப்பதால், வாகனங்களில் செல்வோர் விபத்து அச்சத்தில் சென்று வருகின்றனர்.

பல சமயம் சிறு சிறு விபத்துகளில் சிக்கி, காயம் அடைந்து வருகின்றனர். மேலும், சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

இதுதொடர்பாக, திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், எஸ்.பி., உத்தரவிட்டும், நெடுஞ்சாலையில் ஓய்வெடுக்கும் மாடுகளை கட்டுப்படுத்த, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, நெடுஞ்சாலையில் உலா வரும் மாடுகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டு மென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement