நெல் மூடைகளுக்கான பைகள் விற்பனை ஜரூர் விவசாயிகளுக்கு பயன்படுகிறது

உத்தரகோசமங்கை: மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்களை விவசாயிகள் தை முதல் மாசி மாதம் வரை யிலும் அறுவடை செய்கின்றனர். நெல் மூடைகளுக்கான பிளாஸ்டிக் நுாலால் செய்யப்பட்ட பைகள் பெருவாரியான நகர் பகுதிகளில் விற்பனை செய்யப்படுகிறது.

விவசாயிகள் கூறிய தாவது:

தற்போது நெற்பயிர் அறுவடைக்கு தயாரான நிலையில் அறுவடை இயந்திரத்தின் மூலமாக சேகரித்த பின் நெல்லை பாதுகாக்க சாக்கு மூடைகள் தேவைப்படும்.முன்பு சணலால் நெய்யப்பட்ட சாக்குகள் பயன்பாட்டில் இருந்தது. காலப்போக்கில் பிளாஸ்டிக் இழையிலான சாக்குகளே வரத்து உள்ளன.

உத்தரகோசமங்கை, சிக்கல், கடலாடி, சாயல்குடி உள்ளிட்ட நகர் பகுதி களில் பெருவாரியாக நெல்மூடை சாக்குகளை வாங்கி வியாபாரிகள் ஸ்டாக் வைத்து அவற்றை தேவைப்படும் விவசாயிகளுக்கு விற்பனை செய்கின்றனர். 66 கிலோ நெல் கொள்ளவு சாக்கு பைகள் ரூ.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

துாத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தொழிற்சாலையில் இருந்து கொண்டு வரப்பட்டு ராமநாத புரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு இது போன்ற பிளாஸ்டிக் நுால் நெல் மூடை சாக்குகள் விற்பனை செய்யப் படுகின்றன என்றனர்.

Advertisement