சணல் நாரிழை விலையை கட்டுப்படுத்த கோரிக்கை

கொல்கட்டா : சணல் நாரிழையின் விலையை கட்டுப்படுத்தக் கோரி மத்திய அரசுக்கு சணல் ஆலைகள் கூட்டமைப்பு கடிதம் எழுதியுள்ளது.

அதில் கூறப்பட்டு உள்ளதாவது:

சணல் உற்பத்திக்கான நாரிழைகள் கிடைப்பது குறைந்து கொண்டே வருவதால், பல சணல் ஆலைகள் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

வர்த்தகர்கள், இருப்பு வைத்திருப்பவர்கள் மார்ச் 31ம் தேதிக்கு பின் சணல் நாரிழைகளை தனிப்பட்ட முறையில் விற்பனை செய்தால் அது சட்டவிரோதமானது; எனவே, ஏப்., 1 முதல் இதை அரசு முற்றிலும் தடுக்க வேண்டும்.

மேலும், விலையை கட்டுப்படுத்தி, ஆலைகளுக்கு தேவையான சணல் நார் தடையின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement