அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு; மருத்துவமனைக்கு விரைந்த முதல்வர்

20

சென்னை: அமைச்சர் துரைமுருகனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவரை, முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார்.



திமுக பொதுச் செயலாளராகவும், அமைச்சராகவும் இருப்பவர் துரைமுருகன்(86). வீட்டில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மேலும் சளி தொந்தரவும் இருந்துள்ளது.
இதன் காரணமாக அவர், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டார்.


காய்ச்சல் காரணமாக துரைமுருகனுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் கூறினர்.
துரைமுருகன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவரத்தை அறிந்த முதல்வர் ஸ்டாலின் நேராக மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவரின் உடல்நலம் குறித்து விசாரித்து கேட்டறிந்தார்.

Advertisement