நாட்டை கைப்பற்ற டிரம்ப் தீவிரம்; எதிர்ப்பு தெரிவித்து கிரீன்லாந்து மக்கள் போராட்டம்

8

நமது நிருபர்

கிரீன்லாந்தை கையகப்படுத்த டிரம்பின் தீவிர முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி பேரணி நடத்தினர். அவர்கள் கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று கோஷம் எழுப்பினர்.



ஆர்டிக் பகுதியில் அமைந்துள்ளது, உலகின் மிகப் பெரிய தீவு நாடான கிரீன்லாந்து. ஐரோப்பிய நாடான டென்மார்க்கின் ஒரு பகுதியாக இது இருந்தாலும், தன்னாட்சி அதிகாரம் பெற்றது. கிரீன்லாந்து விவகாரத்தில் யாரும் எந்த முட்டுக்கட்டை யும் போடக் கூடாது. அதை அமெரிக்கா தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நாடுகளுக்கு வரி விதிக்கப்படும் என, அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார்.


தற்போது கிரீன்லாந்தை கையகப்படுத்தும் முடிவை எதிர்க்கும் நாடுகள் மீது வரி விதிப்பேன் என தெரிவித்திருந்தார். தற்போது, 2026ம் ஆண்டு பிப்.1 முதல் டென்மார்க், நார்வே, ஸ்வீடன், பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன், நெதர்லாந்து மற்றும் பின்லாந்து ஆகிய 8 நாடுகளுக்கு 10 சதவீதம் புதிய இறக்குமதி வரியை அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்து அதிரடி காட்டினார்.


இந்நிலையில், டிரம்பின் முயற்சிக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் ஒன்று கூடி கிரீன்லாந்தில் பேரணி நடத்தினர். ஆர்டிக் தீவு இதுவரை கண்டிராத மிகப்பெரிய போராட்டங்களில் அவர்கள் ஈடுபட்டனர். கிரீன்லாந்து விற்பனைக்கு இல்லை என்று எழுதப்பட்ட பதாகைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு நடந்து சென்ற போராட்டக்காரர்கள் வழி நெடுகிலும் கோஷங்களை எழுப்பியபடி சென்றனர். கிரீன்லாந்தின் பிற நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்தன. கிரீன்லாந்து பிரதமர் ஜென்ஸ் பிரடெரிக் நீல்சன் நூக்கில் நடந்த அணிவகுப்பில் கலந்து கொண்டார்.

Advertisement