தை அமாவாசை முன்னோருக்கு தர்ப்பணம்

திருவள்ளூர்: திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் நேற்று, தை அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள், தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

திருவள்ளூர் வீரராகவர் கோவிலில், மாதந்தோறும் அமாவாசை அன்று, திரளான பக்தர்கள் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து, பெருமாளை வழிபட்டு செல்கின்றனர். நேற்று தை அமாவாசை என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேற்று முன்தினம் இரவே திருவள்ளூருக்கு வந்தனர்.

கோவில் வளாகத்தில் தங்கிய பக்தர்கள், நேற்று காலை ஹிருதாப நாசினி குளத்தில் புனித நீராடி, குளக்கரையில் முன்னோருக்கு திதி, தர்ப்பணம் செய்து வழிபட்டனர். பால், வெல்லம் ஆகியவற்றை குளத்தில் கரைத்து, நீண்ட வரிசையில் காத்திருந்து வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.

Advertisement