பட்டறை ரேஷன் கடை திறப்பு

வெங்கத்துார்: பட்டறை பகுதியில் கட்டப்பட்ட ரேஷன் கடைக்கு, நேற்று திறப்பு விழா நடந்தது.

கடம்பத்துார் ஒன்றியம் வெங்கத்துார் ஊராட்சி பட்டறை பகுதியில் உள்ள ரேஷன் கடை சேதமடைந்து இருந்தது. கடந்த 2023 - 24ம் ஆண்டு 14.60 லட்சம் ரூபாயில் புதிதாக ரேஷன் கடை கட்டப்பட்டது.கட்டட பணி முடிந்து ஐந்து மாதங்களாகியும், மின் இணைப்பு வழங்கவில்லை. இதனால், திறப்பு விழா நடத்தப்படாமல் பூட்டியே கிடந்தது. இதனால், ரேஷன் கடை மதுக்கூடமாக மாறியது. இதுகுறித்து, நம் நாளிதழில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக, நேற்று கடம்பத்துார் முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினர் நரேஷ்குமார் முன்னிலையில், அ.தி.மு.க., மாவட்ட செயலரும், முன்னாள் அமைச்சருமான ரமணா, முன்னாள் எம்.பி., திருத்தணி கோ.அரி ஆகியோர் ரேஷன் கடையை திறந்து வைத்தனர்.

Advertisement