சமுதாய நல்லிணக்க பொங்கல் விழா

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில், விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் சமுதாய நல்லிணக்க பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

வ.உ.சி. நகர், முத்து மாரியம்மன் கோவில் தெருவில் நடந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். அமைப்பு செயலாளர் ராமன் முன்னிலை வகித்தார். இணை அமைப்பாளர் தியாகராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் பொங்கல் படையலிட்டு அனைவருக்கும் வழங்கப்பட்டது.

மாவட்ட செயலாளர் பிரேம்குமார், பொருளாளர் சிவராஜ், மாவட்ட அமைப்பாளர் மங்கலம், இணை அமைப்பாளர் ஜெயந்தி, துறவிகள் ஒருங்கிணைப்பாளர் தாயுமானவன் சுவாமிகள், பஜ்ரங்கள் மாவட்ட அமைப்பாளர் பால்ராஜ், ஆர்.எஸ்.எஸ். மாவட்ட தலைவர் மகாதேவன், செயலாளர் சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement