உடலில் ஊசி மூலம் போதை ஏற்றிய வாலிபர் உயிரிழப்பு

புளியந்தோப்பு: உடலில், ஊசி மூலம் போதை ஏற்றிய வாலிபர் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

புளியந்தோப்பு, தட்டாங்குளம் கோவிந்தன் தெருவைச் சேர்ந்தவர் இம்மானுவேல், 21; போதைக்கு அடிமையான இவரை, சில ஆண்டுகளுக்கு முன் போதை மறுவாழ்வு மையத்தில் பெற்றோர் சேர்த்தனர்.

சிகிச்சை பெற்று வீடு திரும்பிய இவர், மீண்டும் தவறான பழக்க வழக்கத்தால் போதைக்கு அடிமையானார்.

இந்நிலையில், புளியந்தோப்பு மாதா கோவில் விளையாட்டு மைதானம் அருகே, நேற்று முன்தினம் மயங்கி கிடந்தார்.

தகவலறிந்த அவரது தந்தை ஜோசப், மகனை மீட்டு ராஜிவ் காந்தி மருத்துவமனையில் சேர்த்தார். மருத்துவ பரிசோதனையில், இம்மானுவேல் இறந்தது தெரியவந்தது.

புளியந்தோப்பு போலீசாரின் விசாரணையில், இம்மானுவேல், அவரது நண்பர் கைமா ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து, நேற்று முன்தினம் போதை ஊசி பயன்படுத்தியுள்ளார். அப்போது, மயங்கி விழுந்து உயிரிழந்தது தெரிய வந்தது.

Advertisement