சக்தி சங்கம விழா
அவிநாசி: கோ சேவா சமிதி குடும்ப ப்ரபோதன் மற்றும் திருப்பூர் காயத்ரி பரிவார் இணைந்து பாரம்பரிய முறைப்படி மாட்டுப்பொங்கல் மற்றும் சக்தி சங்கம விழா, அவிநாசி அருகே வஞ்சிபாளையம் - சாமந்தங்கோட்டை கிராமத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, காயத்ரி பரிவார் டிரஸ்ட் ஸ்ரீ சுனில் வியாஸ் தலைமையில் லோகநாதன் முன்னிலை வகித்தார். திருப்பூர் மாவட்ட கோ சேவா பிரமுக் வெங்கடாசலம் வரவேற்றார்.
நாட்டுப் பசுவின் மகிமைகள் குறித்து அகில பாரத கோ சேவா பயிற்சி பொறுப்பாளர் ராகவன், பாரதிய பார்வையும் பண்புகளும் குறித்து குடும்ப ப்ரபோதன் சம்யோஜக் தஷிண் தமிழ்நாடு ஸ்ரீ கிருஷ்ண முத்துசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். காயத்ரி பரிவார் டிரஸ்ட் ஸ்ரீ நந்துஜி பாண்டியா, ஸ்ரீ மனோகர் சிங் ராஜ் ரோஹித் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்ட கோ சேவா பிரமுக் சம்பத்குமார் நன்றி கூறினார். விழாவில் அனைவருக்கும் பொங்கல் விருந்து அளிக்கப்பட்டது.
மேலும்
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்