ஞாயிறுகளில் கடற்கரை - தாம்பரம் 'ஏசி' மின் ரயில் சேவையில் மாற்றம்

சென்னை: கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில், 'ஏசி' மின்சார ரயில் சேவையில், ஞாயிறுகளில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இந்த மாற்றம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இது குறித்து, சென்னை ரயில்வே கோட்டம் வெளியிட்ட அறிக்கை:

கடற்கரை - தாம்பரம் மார்க்கத்தில், 'ஏசி' மின்சார ரயிலின் சேவை நேரம், ஞாயிறுகளில் மட்டும் மாற்றி அமைக்கப்பட உள்ளது. அதன்படி, ஞாயிறுகளில் இரண்டு 'ஏசி' மின்சார ரயில் சேவையின் நேரம் மாற்றப்படுகிறது.

தாம்பரத்தில் இருந்து, மதியம் 2:25 மணிக்கு புறப்படும் 'ஏசி' மின்சார ரயில், மாலை 3:20 மணிக்கு சென்னை கடற்கரையை வந்தடையும். மறுமார்க்கமாக, சென்னை கடற்கரையில் இருந்து, மாலை 3:52 மணிக்கு புறப்படும் 'ஏசி' மின்சார ரயில், மாலை 4:47 மணிக்கு தாம்பரம் செல்லும். இந்த நேர மாற்றம், இன்று முதல் அமலுக்கு வருகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement