பல்லடம் சர்வோதய சங்கத்துக்கு விருது
பல்லடம்: மாநில அளவில் நடந்த கதர் திருவிழாவில், பல்லடம் சர்வோதய சங்கத்துக்கு விருது கிடைத்துள்ளது.
திருச்சி, தில்லை நகரில், மாநில அளவிலான கதர் திருவிழா நடந்தது. தமிழகம் முழுவதும் இருந்து, 50க்கும் மேற்பட்ட சர்வோதய சங்கங்கள் சார்பில் ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இதில், சிறந்த விற்பனை மற்றும் ஸ்டால் அமைப்பு ஆகியவற்றுக்கான விருது பல்லடம் சர்வோதய சங்கத்துக்கு கிடைத்துள்ளது.
விருதினை பெற்ற சர்வோதய சங்க விற்பனையாளருக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. பல்லடம் சங்க செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார்.
பொருளாளர் ஜெயபால் முன்னிலை வகித்தார். பல்லடம் சர்வோதய சங்க விற்பனையாளர் ரவிச்சந்திரனுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சிறுதானியத்தில் செய்யலாம் அத்தோ நுாடுல்ஸ், மோமோஸ்
-
இதை ஏற்றுக்கொள்ள முடியாது: டிரம்பின் வரி அச்சுறுத்தலுக்கு பிரான்ஸ், பிரிட்டன் எதிர்ப்பு
-
ஈரானில் ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது; சொல்கிறார் டிரம்ப்
-
இன்று தை அமாவாசை; ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடி தர்ப்பணம்
-
கறிக்கோழி தொழிலுக்கு சிக்கல் உற்பத்தியாளர்கள் குமுறல்
-
சி.எம்.சி., டாக்டர் வீட்டில் போதை பொருள் பறிமுதல்
Advertisement
Advertisement