திருவள்ளுவர் தினம்

கடலுார்: கடலுாரில், மாநகர தமிழ்சங்கம் சார்பில் திருவள்ளுவர் தின விழா நடந்தது.

சங்க தலைவர் சுதர்சனம் தலைமை தாங்கி, திருவள்ளுவர் சிலைக்கு மாலை அணிவித்தார். செயலாளர் நல்லதம்பி வரவேற்றார்.

பொருளாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில், பொருளாளர் சிங்காரம், அபிபுல்லா, மனோகரன், ராமலிங்கம்,ல ரகிமா, கலைச்செல்வி, பழனி, வெங்கடேசன், ராமச்சந்திரன், ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement