நாளை பள்ளி கல்லுாரிகள் திறப்பு

திருப்பூர்: விடுமுறை முடிந்து பள்ளி, கல்லுாரிகள் நாளை திறக்கப் படுகின்றன.

பொங்கல் பண்டிகைக்கு ஒரு நாள் முன்னதாக, (13ம் தேதி) போகி பண்டிகையன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; கல்லுாரிகள் செயல்பட்டன.

அதனை தொடர்ந்து, 15ம் முதல், இன்று (18ம் தேதி) வரை பொங்கல் தொடர் விடுமுறை. அனைத்து, பள்ளி, கல்லுாரிகளும் செயல்படவில்லை. இன்றுடன் விடுமுறை முடிந்து, நாளை வழக்கம் போல் அரசு, அரசு உதவி பெறும், தனியார் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அரசு அலுவலகங்களும் செயல்பாட்டை துவக்க உள்ளன.

Advertisement