உயர்கோபுர மின்விளக்கு சேதம் வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்

திருவாலங்காடு: முத்துக்கொண்டாபுரம் மேம்பாலத்தில் சாய்ந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தை சீரமைக்காத அதிகாரிகளின் மீது வாகன ஓட்டிகள் அதிருப்தியில் உள்ளனர்.

கனகம்மாசத்திரம் ---- திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் முத்துக்கொண்டாபுரம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு, கொசஸ்தலையாற்றின் குறுக்கே, 2021ம் ஆண்டு மேம்பாலம் கட்டப்பட்டது.

மேலும், மேம்பாலத்தின் இருபுறமும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. இதில், கனகம்மாசத்திரம் -- திருவாலங்காடு செல்லும் வழியில், மேம்பாலத்தின் மீது அமைக்கப்பட்ட உயர்கோபுர மின்விளக்கு சாய்ந்துள்ள து.

இதனால், வாகன ஓட்டிகள் மற்ற கம்பங்கள் விழுமோ என்ற அச்சத்தில் பாலத்தை கடந்து செல்கின்றனர். முறிந்து விழுந்த உயர்கோபுர மின்விளக்கை விரைந்து சீரமைக்க, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement