அரசு பஸ்களில் 'தமிழ்நாடு' பெயர் நீக்கத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்
மதுரை; அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் நீக்கப்பட்ட 'தமிழ்நாடு' பெயர் இடம்பெறுவதை உறுதி செய்ய தாக்கலான வழக்கில் தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
துாத்துக்குடி மாவட்டம் கடம்பூர் செல்வகுமார் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்தின் கீழ் உள்ள பஸ்களில் தற்போது தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டுள்ளது. தமிழின காவலர்களாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் தமிழக அரசு திட்டமிட்டே நீக்கியுள்ளது.
மாநிலத்திற்கு தமிழ்நாடு என பெயர் சூட்டக்கோரி 79 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து இறந்த தியாகி சங்கரலிங்கனார், அப்பெயரை சூட்டிய அண்ணாதுரையின் நோக்கத்திற்கு எதிரானது இது.
அரசு பஸ்களில் தமிழ்நாடு பெயர் நீக்கம் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும். அரசு போக்குவரத்துக் கழக நிர்வாகத்திற்கு ரூ.1 கோடி அபராதம் விதிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக தலைமைச் செயலர், போக்குவரத்துறை முதன்மைச் செயலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு குறிப்பிட்டார்.
நீதிபதிகள் ஜி.ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு தலைமைச் செயலர், போக்குவரத்துறை முதன்மைச் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு பிப்.,16 க்கு ஒத்தி வைத்தது.
மேலும்
-
இளம் தலைமுறைக்கு வழிகாட்டி கோலி: கவாஸ்கர் பாராட்டு
-
3 தங்கம் வென்றார் துளசிமதி * எகிப்து பாரா பாட்மின்டனில்
-
'பிளே-ஆப்' சுற்றில் பெங்களூரு: தொடர்ந்து 5வது வெற்றி
-
தமிழகம் இரண்டு தங்கம் * தேசிய பள்ளி செஸ் தொடரில்...
-
வங்கதேச அணிக்கு ஐ.சி.சி., கெடு * 'டி-20' உலக கோப்பை தொடரில் பங்கேற்க...
-
வெளியேறியது கேப்டவுன் அணி * 'எஸ்.ஏ.20' தொடரில்