கள்ளக்குறிச்சி ஆற்றுத் திருவிழாவில் ஹீலியம் சிலிண்டர் வெடித்து மூவர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நடந்த ஆற்றுத் திருவிழாவில் பலூனுக்கு கேஸ் நிரப்பும் ஹீலியம் சிலிண்டர் வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்.


கள்ளக்குறிச்சி மாவட்டம் மணலூர்பேட்டையில் ஆற்றுத் திருவிழா நடந்து வருகிறது. திருவிழா முடிந்து மக்கள் வீடு திரும்பும் நேரத்தில், பலூனில் கேஸ் நிரப்ப பயன்படுத்தப்பட்ட ஹீலியம் சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் சம்பவ இடத்தில் 3 பேர் உயிரிழந்தனர். 10 பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement