கொலம்பியாவில் ஆயுத குழுக்கள் மோதி கொண்டதில் 27 பேர் பலி

2


பகோடா: கொலம்பியாவில் ஆயுத குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதலில் 27 பேர் உயிரிழந்துள்ளனர்.


தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், எப்.ஏ.ஆர்,.சி., எனப்படும் கொலம்பியா புரட்சிகர ஆயுதக் குழு, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகிறது. அரசுக்கு எதிராக போராட்டங்களில் ஈடுபட்டிருந்த நிலையில், உள்நாட்டு போரை நிறுத்துவது தொடர்பான பேச்சுக்கு, இந்தக் குழு முன்வந்தது.


இதற்கு எதிர்ப்பு எழுந்ததால், இந்த ஆயுதக் குழு இரண்டாக பிளவுபட்டது. இந்நிலையில், அமேசானின் குவாவைரே பகுதியை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது தொடர்பாக, இந்தக் குழுக்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில், 27 பேர் உயிரிழந்துள்ளனர்.

Advertisement