தென் ஆப்ரிக்காவில் டிரக் மீது பள்ளி வாகனம் மோதல்: 13 மாணவர்கள் பலி

1


ஜோக்ன்னஸ்பெர்க்: தென் ஆப்ரிக்காவில் டிரக் மீது பள்ளி வாகனம் மோதியதில் 13 மாணவர்கள் உயிரிழந்தனர்.

தனியாருக்கு சொந்தமான அந்த வாகனம், பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவர்களை ஏற்றிக் கொண்டு சென்றது. அந்நாட்டு நேரப்படி இன்று காலை 7 மணியளவில் முன்னர் சென்ற வாகனத்தை முந்திச் செல்ல முயன்ற போது எதிரே வந்த டிரக் மீது வாகனம் மோதியது.

அதில் சம்பவ இடத்திலேயே 11 மாணவர்கள் உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 2 மாணவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதற்கு அந்நாட்டு அதிபர் சிறில் ரமாபோசா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Advertisement