கரூர் வட்டாரத்தில் கடும் பனி பொதுமக்கள் குளிரால் தவிப்பு

கரூர்: கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று காலை, கடும் பனிப்பொழிவு காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் குளிரால் தவிப்புக்-குள்ளாகினர்.
தை மாதத்தில், தரையெல்லாம் குளிரும் என்ற பழமொழி உண்டு. தை மாதம் துவங்கி, ஐந்து நாட்கள் ஆன நிலையில், தமிழகத்தில், மூன்று நாட்களுக்கு வறண்ட வானிலை காணப்படும்


என, சென்னை வானிலை மையம், நேற்று முன்-தினம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதல் கரூர் மற்றும் சுற்று வட்டார பகுதி-களில், வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. மேலும், நேற்று காலை வரை, பனிப்பொழிவு அதிகமாக இருந்தது. கரூர் நகரை சுற்றி செல்லும் சேலம், திருச்சி, மதுரை மற்றும் கோவை நெடுஞ்சாலைகளில் பனிப்பொழிவுடன், குளிர்ந்த காற்றும் வீசியது. மேலும், கரூர் நகரப்பகுதி வழி-யாக செல்லும் அமராவதி ஆற்றிலும் பனிப்பொ-ழிவு இருந்தது. இதனால், பொதுமக்கள் சாரல் மழை மற்றும் கடும் குளிர் காரணமாக தவிப்புக்-குள்ளாகினர்.

Advertisement