ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்ககோரி மதுரை முதன்மை கல்வி அலுவலகத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 10வது நாளாக போராட்டம் நடத்தினர்.

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தை (எஸ்.எஸ்.டி.ஏ.) சேர்ந்தவர்கள் சென்னை யில் தொடர் போராட்டம் நடத்தினர். தற்போது மாவட்ட சி.இ.ஓ., அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். நேற்று மாவட்ட தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். 50 ஆசிரியர்கள் பங்கேற்றனர். போராட்டத்தை தீவிரப்படுத்த சென்னையில் முகாமிட உள்ளனர். போராட்டத்தால் தொடக்க பள்ளிகளில் கற்பித்தல் பணி பாதித்துள்ளது.

Advertisement