நெல் பயிருக்கு காப்பீடு செய்ய ஜன., 31 வரை கால அவகாசம்
கிருஷ்ணகிரி: ராபி பருவத்தில் நெல் பயிருக்கு காப்பீடு செய்ய வரும், 31 வரை கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண் இணை இயக்-குனர் காளிமுத்து வெளியிட்டுள்ள அறிக்கை:
விவசாயிகள் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்பை ஈடு செய்ய, பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்-பட்டு வருகிறது. பயிர் காப்பீடு செய்ய பொதுச்சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கம் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம், பூர்த்தி செய்த விண்-ணப்பம், நடப்பு பருவ அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு புத்த-கத்தின் முதல் பக்க நகல் மற்றும் ஆதார் அட்டை ஆகிய ஆவ-ணங்களை கொண்டு, விவசாயிகள் பதிவு செய்யலாம்.
ராபி பருவத்தில், நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் மூலம் நெல் பயிர் காப்பீடு செய்ய வரும், 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. நெல் பயிருக்கு, காப்பீடு செய்ய ஏக்கருக்கு, 474.90 ரூபாய் பிரீ-மியம் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் மகசூல் இழப்புக்கு, காப்-பீட்டு தொகையாக ஏக்கருக்கு, 38,300 ரூபாய் வழங்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு தங்கள் வட்டாரத்திலுள்ள வேளாண் உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
மேலும்
-
தனியொருவனாக போராடிய கோலி; இந்திய மண்ணில் முதல்முறையாக தொடரை வென்றது நியூசிலாந்து
-
ஊடகங்களை ஒடுக்கும் ஆம் ஆத்மி அரசு; பஞ்சாப் கவர்னரிடம் பா.ஜ., புகார்
-
ஹாக்கி இந்தியா லீக்: பெங்கால் அணி வெற்றி
-
மாஸ்டர்ஸ் செஸ்: அர்ஜுன் அபாரம்
-
ஷ்ரேயங்கா தேர்வு: இந்திய அணி அறிவிப்பு
-
பிரதமரின் அழைப்பை ஏற்று இந்தியா வருகிறார் யுஏஇ அதிபர்