டீக்கடையில் தீ விபத்து

ஆவடி: ஆவடியில், மின் கசிவால் டீக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.

ஆவடி, சரஸ்வதி நகரைச் சேர்ந்தவர் இர்பான், 35; 'மசாபி' என்ற பெயரில் டீக்கடை நடத்தி வருகிறார். நேற்று நள்ளிரவு 1:00 மணியளவில் கடையில் இருந்து கரும்புகை வெளியேறி, திடீரென தீப்பற்றி எரிய துவங்கியது.

சம்பவ இடத்திற்கு வந்த நாகராஜன் தலைமையிலான ஆவடி தீயணைப்பு நிலைய வீரர்கள், கடையின் 'ஷட்டர்' பூட்டை உடைத்து, அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

அதற்குள், கடையில் இருந்த, பிரிஜ் உள்ளிட்ட அனைந்து பொருட்களும் தீக்கிரையாகின. முதற்கட்ட விசாரணையில், மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. ஆவடி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement